இரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் அபிராமி பற்றிய செய்திகள் தான். பெண் ஒருவர் தன் இரண்டு குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 'மகளைக் கொன்றதைக்கூட முகத்தில் காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகத்துடனே என்னை வழியனுப்பி வைத்தாள் அபிராமி'எனக் கண்ணீர்மல்க தெரிவித்திருக்கிறார் கணவர் விஜய்.