சென்னையின் பிரபல வியாபார நிறுவனங்களில் ரத்னா ஸ்டோர்ஸும் ஒன்று.நம்பிக்கை, கைராசி சென்டிமென்ட்...என்கிற வகையில் வீட்டுப் பாத்திரங்கள் மற்றும் பொருள்கள் விற்பனையில் கஸ்டமர்கள் மத்தியில் குறிப்பாக வீட்டுப் பெண்கள் மத்தியில் பிரபலமான கடை அது.சென்னையில் பாண்டிபஜார், தாம்பரம், உஸ்மான் ரோடு, புரசைவாக்கம், வடபழனி, கே.கே.நகர் மற்றும் திருச்சியில் ஒரு கடை..இப்படிப் பல கடைகள் இயங்கி வந்தன. 72 வருடம் பாரம்பர்யம் கொண்ட இந்த கடையில் சுமார் ஆயிரம் பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.இப்படி இருந்த நிறுவனம், தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பதாக வங்கிகள் குற்றம்சாட்டுகின்றன.
#chennai #tnagar #RatnaStores