ஸ்னோலின்... பள்ளிச் சோலையை முடித்து,கல்லூரிச் சாரலில் நனைய கனவு கண்டுகொண்டிருந்த மாணவி. தான் வாழும் ஊரின் வாழ்வுக்காகவும் வருங்காலத் தலைமுறையின் நலனுக்காகவும் போராடி, துப்பாக்கித் தோட்டாக்களுக்குப் பலியான மாணவி. நச்சு கக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், தன் உயிரைக் கொடுத்து, `வீர மங்கை'யாக அனைவரின் மனங்களிலும் வாழ்பவர்.
current situation about snowlin who was shot down by tuticorin police during sterlite protest