``இப்போதே கொளுத்தத் தொடங்கிவிட்டது கோடை வெயில். வீதிக்கு வீதி, தர்பூசணிப் பழங்கள், குளிர்பானங்கள், பழச்சாறுகள் விற்பனை களைகட்டத் தொடங்கிவிட்டது. இன்னொரு பக்கம் ஆண்டு முழுவதும் விற்பனையாகும் இளநீரின் விற்பனையும் சூடுபிடித்திருக்கிறது. விற்பனை சூடுபிடிப்பது இருக்கட்டும்... உடல் சூட்டைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுவது இளநீர். `பல தாதுச்சத்துகளையும் ஊட்டச்சத்துகளையும் கொண்டிருக்கும் இளநீரைக் குடிப்பது அவ்வளவு நல்லது’ என்கிறது மருத்துவம்.
health benefits of tender coconut.