வெங்காயத்தாள் கிடைக்கும் நன்மைகள்...வீடியோ

Oneindia Tamil 2018-01-05

Views 7

அனைவரது சமையலறையிலும் இருக்கும் ஒரு பொதுவான உணவுப் பொருள் தான் வெங்காயம். இது உணவின் சுவையை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமின்றி, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் தன்னுள் கொண்டது. இதற்கு வெங்காயத்தில் அடங்கியுள்ள மருத்துவ பண்புகள் தான் முக்கிய காரணம்.

ஆனால் வெங்காயத்தைக் கொண்டு ஆஸ்துமா பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பது தெரியுமா? வெங்காயத்தில் 2 வகைகள் உள்ளன. அவை வெள்ளை மற்றும் சிவப்பு. இவற்றில் சிவப்பு வெங்காயம் தான் ஆஸ்துமாவை சரிசெய்வதில் சிறந்தது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

அதோடு சிவப்பு வெங்காயத்தில் வைட்டமின் சி, சல்பர், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகளும் அடங்கியுள்ளன. பல்வேறு ஆய்வுகளிலும் சிவப்பு வெங்காயத்தில் உள்ள தியோசல்பினேட், க்யூயர்சிடின், ஆந்தோசையனின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் ஆஸ்துமா மற்றும் அலர்ஜியை சரிசெய்வதாக் கண்டறியப்பட்டுள்ளது.

இப்போது ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட சிவப்பு வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது என்று காண்போம். அதைப் படித்து முயற்சித்து, ஆஸ்துமாவில் இருந்து விடுபடுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிவப்பு வெங்காயம் - 1/2 கிலோ

* தேன் - 6-8 டேபிள் ஸ்பூன்

* நாட்டுச்சர்க்கரை - 300-350 கிராம்

* எலுமிச்சை - 2

* தண்ணீர் - 5-6 டம்ளர்

செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து உருக வைக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தை நறுக்கிப் போட வேண்டும்.

* அடுத்து அதில் நீர் சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

* நீர் கொதித்து நன்கு சுண்டிய நிலையில், அடுப்பை அணைத்து கலவையை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின் அதில் எலுமிச்சைகளைப் பிழித்து, தேன் சேர்த்து கலந்து, ஒரு கண்ணாடி பாட்டியில் போட்டுக் கொள்ளுங்கள்.

There are so many uses of onions. they can be used to cure asthma, stomach aches, migranes, mouth ulcer, etc.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS