'சின்னம்மாவின் சபதத்தை நிறைவேற்றிவிட்டோம்' என்று விசுவாசத்துடன் பேட்டி கொடுத்த, இதற்கு முன் நாங்கள் பெயர், முகம் கூட அறிந்திடாத தமிழகத்தின் புதிய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி எம்.எல்.ஏ அவர்களே... 'எங்கள் சின்னம்மாவின் சபதத்தை நிறைவேற்ற வேண்டும், அதற்காக வாக்களியுங்கள்' என்று சொல்லியா எங்களிடம் சென்ற வருடம் ஓட்டுக்கேட்டு வந்தீர்கள்? யாருடைய ஓட்டை வைத்து யாரின் சபதத்தை நிறைவேற்றுகிறீர்கள்? 'மக்களின் தேவைகளை நிறைவேற்றிவிட்டோம்' என்று சொல்லும்படி உங்கள் தொகுதியில் ஏதாவது இதுவரை செய்திருக்கிறீர்களா? என்பதை, உங்கள் தொகுதி மக்கள் 'விளக்கமாகவே' சொல்லிவருகிறார்கள். இப்போது உங்கள் கைகளில் தமிழகம். நீங்கள் மன்னார்குடி கைகளில். சரி... உங்களின் 'சின்னம்மா', ஓட்டுப் போட்ட எங்களுக்கு யார்? இது, மக்களால், மக்களுக்காக, மக்களே தேர்ந்தெடுத்த குடியாட்சியா?