அன்பானவன் அசராதவன் அடங்காதவன் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை சிம்பு கதறவிட்டது தொடர்பாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் நஷ்டம் அடைந்ததற்கு காரணம் சிம்பு என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மைக்கேல் ராயப்பன் எழுதியதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த கடிதத்தில் இருந்து சில விஷயங்கள், இன்டஸ்ட்ரியில் இருக்கும் எந்த கதாநாயகியும் சிம்புவுடன் நடிக்க தயாராக இல்லை. த்ரிஷா நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பி தந்துவிட்டார். லட்சுமி மேனனை கொச்சினில் சந்தித்தும் மறுத்துவிட்டார். கடைசியில் ஸ்ரேயா ஒப்புக் கொண்டார். முதல் ஷெட்யூல் முடிந்த பிறகு அதே கெட்டப்பில் பாடல் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் ஸ்ரேயா சரியில்லை. அதனால் அவளை நீக்கிவிட்டு திரும்பவும் படப்பிடிப்பு நடத்தலாம் என்றார். அவர் ஸ்ரேயாவுடன் மீண்டும் நடிக்க விரும்பாத காரணம் அவருக்கு மட்டுமே தெரியும்.
A letter said to be written by AAA producer Michael Royappan has gone viral on social media. He has mentioned how Simbu tortured him and director Adhik Ravichandran during the shooting of AAA.