ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் விக்டஸ், ஜான்பால், மாரிமுத்து உள்ளிட்ட 4 மீனவர்கள் பலியாகினர். அதன் பிறகு நடந்த துப்பாக்கிச் சூட்டில், காரைக்காலைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இதுபோல அவ்வப்போது தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், சிறைப்பிடித்துச் செல்வதும் இலங்கைக் கடற்படையினரின் தொடர் நடவடிக்கையாக இருந்துவருகிறது. ஆனால், உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதில்லை. சுமார் 6 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீனவர் ஒருவரது உயிர் இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டினால் பறிக்கப்பட்டிருக்கிறது.