ஒருவரது ஜாதகத்தில் தொழில்ஸ்தானம் என்பது லக்னத்திலிருந்து 10-ம் இடமாகும். அதில் அவர் தரும் பணியாற்றும் விதம், அதாவது அதில் அவரது ஈடுபாடு, சகமனிதர்களிடம் பழகும் சூழல் ஆகியவற்றைக் குறிப்பது ஆறாமிடமாகும்.
இப்படி வேலைக்குச் சென்ற பிறகு, உடனே அவருக்குப் பதவி உயர்வு என்பது இருக்காது. அந்த வேலையில் அவரது ஈடுபாடு, அவர் காட்டும்விசுவாசம் இதெல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் அவரது முதலாளி அவருக்குப் பதவி உயர்வைக் கொடுப்பார்.
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 7-ம் வீட்டுக்குடைய அதிபதி, 9-ம் வீட்டுக்குடைய அதிபதி, 11-ம் வீட்டுக்குடைய அதிபதி ஆகியோர் நல்லநிலையில் அமர்ந்து பலம் பெறவேண்டும்.
7-ம் வீடு என்பது அவர் வேலை செய்யும் இடம். 9-ம் வீடு என்பது அவரது உயர் அதிகாரி. 11-ம் இடம் என்பது அவரது உயர்வை, புகழைச் சொல்லுமிடம். இந்த இடங்கள் நன்கு பலம்பெற்றுஅமைந்தால், அவருக்கு வேலையில் உயர்வு உண்டு. எப்போது?
மேலே சொன்னபடி அந்த அமைப்பு இருந்து, அந்த கிரகங்களின் தசா புத்திகள் நடப்பில் வரும்போது, கோசார பலனும் சாதகமாக இருக்கும்போது அந்த உயர்வு கிடைக்கும். மற்ற நேரங்களில் கிடைக்காமல் தள்ளிப்போகும்.
பதவி உயர்வு தள்ளிப்போகும் நேரங்களில் அதற்கான ஜோதிட ரீதியான காரணத்தைத் தெரிந்துகொண்டு, தெய்வ வழிபாடு செய்வது அவசியமாகும்