மருத்துவமனை கேட் அருகில் தவித்து நின்ற 8 மாத கர்ப்பிணி; சொந்த காரில் ஊருக்கு அனுப்பி வைத்த காவல்துறை!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்ற 8 மாத கர்ப்பிணி பெண் திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்துள்ளார் மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த பிறகு, தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையால், மீண்டும் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர் வேறுவழியில்லாமல் அரசு மருத்துவமனை வாயிலில் அமர்ந்திருந்த ஷாலினி மற்றும் அவரது குடும்பத்தினரை பார்த்த மாநகர காவல்துறையினர் விசாரித்தபோது சொந்த ஊர் செல்ல வாகனம் இல்லாமல் காத்திருப்பதாகவும் வேறு வழி இல்லாமல் இருப்பதால் உதவி புரியுமாறு கேட்டுள்ளனர் இதனையடுத்து மாநகர காவல்துறை சார்பில் அவர்கள் செல்ல வாகனம் ஏற்படுத்தப்பட்டு ராசிபுரத்திற்க்கு காவல்துறையின் பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காவல்துறையின் இந்த மனிதாபிமான செயல் பாட்டை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர். | #Namakkal #Police
*One Month FREE FREE FREE*
விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!
உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.
கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்!
Link : https://bit.ly/GiftFromVikatan
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India