ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவைச் சேர்ந்த சீனாங்குடி கிராமத்தில் குடிநீர்இ மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த கிராமத்தில்இ இங்கு சுமார் 150 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்இ வரட்சியின் காரணமாக இந்த ஆண்டு அதிக அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுஇ இதனால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும்இ எனவே தங்கள் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் வினியோகத்தை தடையின்றி வழங்க வேண்டும். தங்கள் கிராமத்திற்கு அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும்.இ பகுதிநேர ரேஷன் கடை முறையான சாலை வசதிகள் அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து இந்த கிராம பொதுமக்கள் கூறுகையில்இ சிறப்பாக செயலாற்றி வரும் தமிழக அரசு அனைத்து திட்டங்களையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஒரு சில அதிகாரிகளின் மெத்தன போக்கால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தங்கள் கிராமத்திற்கு குடிநீர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
DES : Public demand to the District Collector for providing basic amenities including drinking water