புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே செம்புமாதேவிபட்டணம் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரகோரி மீனவர்கள் கோரிக்கை. மணமேல்குடி அருகே செம்புமாதேவிபட்டிணம் எனும் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாட்டுபடகுடன் மீனவர்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் முரள் வகைமீன்கள் ஏற்றுமதி செய்யகூடிய அளவில் உள்ள நண்டு,இறால், வகைகள் அதிக அளவில் கிடைக்கின்றது. இது மட்டுமில்லாமல் குளிர்பானங்கள் மற்றும் மிட்டாய் வகைகளில் சேர்க்கபடும் கடல் பாசி வளர்க்கும் தொழிலும் இப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
கடலுக்குள் முளைக்கும் பாசி இந்த பாசியினை கடல்பசு உணவாக உண்ணும் இது அதிக அளவில் கரையில் ஒதுங்கி பெருமளவில் குப்பையாக கரை ஓரத்தில் தேங்குகிறது. இதனால் கரையிலிருந்து சுமார் 40மீட்டர் தூரத்திற்கு முன்னதாக படகை நிறுத்திவிட்டு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனை சுத்தபடுத்தி கரையை ஆழபடுத்தி படகு நிறுத்துவதற்க்கு வழிவகை செய்து மீன்பிடி தொழில் செய்வதற்க்கு ஏதுவாக செய்துதர வேண்டும். மேலும் மீன்பிடி வலையை உலர்த்துவதற்க்கு ஒரு உலர் தளம் அமைத்து தர வேண்டும் ஒரு சமுதாய கூடமும் கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
DES : Request for basic fisheries fishermen
#Pudhukottai
#Fisherman