புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் தெரிவித்ததாவது,
தமிழ்நாட்டில் தற்போது தண்ணீர் பஞ்சம் ஆனது தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது போல தெரியவில்லை கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார் இது வரவேற்கத்தக்கது ஆனாலும் இதனை முழுமையாக செய்து முடிக்க வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை என்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அது நடைமுறைக்கு வரும்போது கல்வியே இல்லாத நிலைதான் ஏற்படும். மக்களுக்கு தீமை தரும் ஹைட்ரோ கார்பன் திட்டம் மீத்தேன் திட்டம் அணுக்கழிவு தொழிற்சாலை திட்டம் நீட் தேர்வு போன்றவை மக்களுக்கு தீமை தரக்கூடிய செயலாக இருக்கிறது மற்ற மாநிலங்களில் அதை ஏற்க மறுக்கும் பொழுது தமிழகத்தில் மட்டும் முதலமைச்சர் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்திக் கொண்டு வருகிறார் அவ்வாறு செய்வது தவறு. மேலும் பாரதிய ஜனதா கட்சி ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத கட்சி அவர்கள் ஆர்எஸ்எஸின் பிள்ளைகள் மட்டுமே இந்த நாட்டின் சர்வாதிகாரத்தை மட்டுமே கொள்கையாக கொண்டுள்ளது. தமிழகத்தில் இப்படிப்பட்ட திட்டங்களை கொண்டு வந்தால் என்ன நடக்கும் என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும் ஆனாலும் நம்மில் திணிக்க நினைப்பது வேண்டுமென்றே செய்யக்கூடிய செயல். பாஜக நாடாளுமன்றத்தில் 303 வாக்குகளை பெற்று இருக்கிறதே தவிர மக்களிடம் எந்த வாக்கையும் பெறவில்லை இதனால் இவர்களின் வெற்றி நிலையானது அல்ல என்று தெரிவித்தார்.
des : Mutharasan interviews RSS children in Pudukkottai