இரட்டை இலை சின்னம் வழங்கியுள்ளது எதிர்பார்த்தது தான்- தொல் திருமாவளவன் பேட்டி- வீடியோ

Oneindia Tamil 2017-11-24

Views 111

தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி ஓபிஎஸ் அணிக்கு வழங்கியுள்ளது எதிர்பார்த்தது தான் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கந்து வட்டி பணம் கொடுப்பவர்கள் பின்னணியில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உள்ளதால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் இரட்டை இலை சின்னம் எடப்பாடி ஓபிஎஸ் அணிக்கு கிடைத்துள்ளதால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் இந்த அணிகளுக்கு தான் வழங்கும் என்பது முன்பே தெரிந்த விஷயம் தான் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Des : Thirumavalavan byte

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS