மத்திய அரசு உதவியால் இரட்டை இலை சின்னம் கிடைத்ததா?- வீடியோ

Oneindia Tamil 2017-11-23

Views 4.9K

இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு கிடைக்க பாஜகவுடன் இணக்கமாக உள்ளதுதான் காரணமா என்ற நிருபர்களின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்.
தேர்தல் ஆணையத்திடமிருந்து இரட்டை இலை குறித்து உரிய அறிவிப்பு வெளியாகும் முன்பே, பிரஸ் மீட்டில், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைத்துள்ளதாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
அப்போது மிகுந்த மகிழ்ச்சியாக காணப்பட்டார் முதல்வர்.முதல்வரிடம், பாஜகவிடம் உங்கள் அணியினர் இணக்கமாக இருப்பதால், இந்த சின்னம் பிரச்சினையில் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதாக பார்க்கிறீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இரட்டை இலை சின்னம் கிடைத்ததன் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக நீங்கள் கூறுவது தவறான கருத்து. தேர்தல் கமிஷனிடம் வழக்கு நடைபெற்றது. தேர்தல் கமிஷன் கேட்ட தகுந்த விளக்கங்களை அளித்தோம். தேவைப்படும் ஆதாரங்களை ஒப்படைத்த காரணத்தால்தான் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

English summary CM Edappadi Palanisamy denied report of Modi government's involvement in the two leaves case.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS