12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
லண்டன் ஓவல் மைதானத்தில், நடந்த 14-வது லீக் ஆட்டத்தில்
இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதின.
‘டாஸ்’ வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஷிகர் தவானும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும்
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய
அணி 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் எடுத்தது.
இந்திய வீரர்கள் கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய
116 ரன்கள் எடுத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.