பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி 197 வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது கடந்த தேர்தலை காட்டிலும் 6 வாக்குகள் குறைவாகவே பதிவானது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் உள்ள 197 வது வாக்குச்சாவடியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலின்போது மாதிரி வாக்குகளை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து வாக்குப்பதிவை நடத்தியதால் ஏற்பட்ட குலறுபடியின் காரணமாக தேர்தல் ஆணையம் இந்த வாக்குச்சாவடியில் மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்திட உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு பதிவிற்காக காலை 6 மணி முதலே இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிகள் காலை மணி 6 முதலே வாக்களிக்க காத்திருந்தனர் இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சிறு கோளாறு காரணமாக காலை 7 மணிக்கு துவங்க இருந்த வாக்குப்பதிவு 15 நிமிடம் காலதாமதமாக துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது மொத்தமுள்ள 1405 வாக்காளர்களில் 898 வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளனர் இதில் ஆண்கள் 422 பேரும் பெண்கள் 476 பேரும் தங்கள் வாக்கை செலுத்தினர். கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலின் போது 904 வாக்குகள் பதிவான நிலையில் இன்று 6 வாக்குகள் குறைந்து 898 வாக்குகள் மட்டுமே பதிவானது. மாலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவுற்று பின்பு முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீலிடப்பட்டு வாக்குப்பதிவு எண்ணிக்கை மையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.
des : Vadukapatty, near Periyakulam, will be re-registered at 197 polling