இரண்டாம் நாள் போட்டியில் சென்னை கஸ்டம்ஸ், சென்னை இந்தியன் வங்கி,செகேந்திரபாத் அணிகள் வெற்றி- வீடியோ

Oneindia Tamil 2019-05-18

Views 395

பெரியகுளத்தில் நடைபெறும் 60-ம் ஆண்டுஅகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட இரண்டாம் நாள் போட்டியில் சென்னை விளையாட்டு விடுதி, சென்னை கஸ்டம்ஸ், சென்னை இந்தியன் வங்கி, செகேந்திரபாத் அணிகள் வெற்றி பெற்று அடுத்தசுற்றுக்கு முன்னேற்றம். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 60-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் நேற்று துவங்கியது. இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் போட்டியில் முதலாவது நடைபெற்ற போட்டியில் கரூர் டெக்ஸ்சிட்டி அணியும் சென்னை விளையாட்டு விடுதி அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை விளையாட்டு விடுதி அணி 98க்கு 45 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடை பெற்ற போட்டியில் சேலம் திரிவேனி கூடைப்பந்தாட்டக் கழக அணியும் ஏ.ஓ.ஸி செகந்திராபாத் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் 102க்கு 58என்ற புள்ளிகள் ஏ.ஓ.ஸி செகந்திராபாத் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாவது நடைபெற்ற போட்டியில் தெற்கு ரயில்வே சென்னை அணியும் கஸ்டம்ஸ் சென்னை அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை கஸ்டம்ஸ் அணி 94க்கு 70 என்ற புள்ளிகள் அடிப்ப்டையில் வெற்றி பெற்றதை தொடர்ந்து 4வதாக நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் கூடைப்பந்தாட்ட கழக அணியும் இந்தியன் வங்கி சென்னை அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணி 116க்கு 77 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. பெற்றஅணிகள் அடுத்து நடைபெற உள்ள லீக் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. நாக்கவுட் முறையில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெரும் அணிகள் பின்னர் லீக் சுற்று முறையில் போட்டிகளில் பங்கேற்க்க உள்ளன.1032

desv : Chennai Games, Chennai Casts, Chennai Indian Bank and Chekhyabadabad teams won the second day of the competition.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS