அஜித்தின் பிறந்தநாள் மே மாதம் 1ம் தேதி வருகிறது. அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் ஏற்கனவே துவங்கிவிட்டனர். இந்நிலையில் தல ரசிகர்கள் அனைவரும் ட்விட்டரில் ஒரே மாதிரியான டிபி வைத்துள்ளனர். இந்நிலையில் தல ரசிகரான இயக்குநர் விக்னேஷ் சிவனும் அதே டிபியை வைத்துள்ளார். இன்டர்நெட் இல்லாத இடத்தில் மாட்டிக் கொண்டதால் உடனே டிபியை வெளியிட முடியவில்லை என்று கூறி தல ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் விக்னேஷ் சிவன். தலக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்களுக்கு திருவிழா வாழ்த்து என்று தெரிவித்துள்ளார் அவர்.
#VigneshShivan
#Ajith
#May1
#ThalaFans