ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குநர் ஆனவர் ஷங்கர். 1993ம் ஆண்டு ஜூலை மாதம் அந்த படம் வெளியானது. அதில் இருந்து இந்நாள் வரை கோலிவுட்டின் வெற்றிகரமான இயக்குநராக உள்ளார் அவர். இந்நிலையில் ஷங்கர் இயக்குநராகி 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி இயக்குநர் மிஷ்கின் பார்ட்டி கொடுத்துள்ளார். மிஷ்கின் கொடுத்த பார்ட்டியில் இயக்குநர்கள் மணிரத்னம், கவுதம் மேனன், பா. ரஞ்சித், மோகன்ராஜா, பாண்டிராஜ், பாலாஜி சக்திவேல், சசி, அட்லி, எழில், லிங்குசாமி, வசந்த பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பார்ட்டிக்கு வந்த அனைவரும் S-25 என்று எழுதியிருந்த டி-சர்ட் அணிந்திருந்தனர்.
#Shankar
#Shankar25
#Mysskin
#Maniratnam