குழந்தையின் சடலத்தை தெரு நாய் இழுத்து சென்றதால் பரபரப்பு-வீடியோ

Oneindia Tamil 2019-03-23

Views 2.3K

ஓசூர் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் இறந்த குழந்தையின் சடலத்தை தெரு நாய் இழுத்து சென்றது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கர்னுர் பகுதியில் வசித்து வருபவர் நாகம்மா - முரளி தம்பதியினர். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் நாகம்மாள் 4 வது முறையாக நிறைமாத கர்ப்பிணியாகியுள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் செய்து வரப்பட்ட நிலையில் திடிரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகம்மாளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை குறைவாக இருந்ததால் பச்சிளம் குழந்தைகள் வார்டில் வைத்துள்ளனர். பின்னர் குழந்தை இறந்துவிட்டதாக கூறி நாகம்மாவிடம் செவிலியர்கள் ஒப்படைத்துள்ளனர்.குழந்தையின் உடலை எங்கு எடுத்துச் செல்வது என்று விடை தெரியாமல் அனுமதிக்கப்பட்டிருந்த பிரசவ வார்டில் குழந்தையை வைத்துள்ளனர். ஆனால்பிரசவ வார்டில் இருந்த தாய்மார்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிளாஸ்டிக் பையில் குழந்தையின் சடலத்தை நாகம்மாவின் மாமியார் கழிவறையில் வைத்துள்ளார். இந்நிலையில் கழிவறையில் சுத்தம் செய்ய வந்த பணியாளர்கள் பிளாஸ்டிக்பையை குப்பை தொட்டியில் போட்டுள்ளனர். பின்னர் நாகம்மாவின் மாமியார் கழிவறையில் வந்து பார்த்த போது குழந்தையின் சடலம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து குப்பையில் இருந்த குழந்தையின் சடலத்தை அங்கு சுற்றித் திரிந்த நாய்கள் எடுத்து சென்றதை கண்ட அவசர ஊர்தி ஓட்டுனர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துமனையில் வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

des:
The street dog pulled the body of the child and hesitated.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS