பரதக்கலைக்கு புத்துயிரூட்டிய நங்கையர்
திருவாரூர் நாட்டியக் கலைக்கு பெயர்பெற்ற நகரமாகும் தஞ்சையை ஆண்ட இராஜராஜ சோழன் திருவாரூரில் இருந்து 50 நாட்டிய நங்கைகளை அழைத்துச் சென்று தஞ்சையில் நாட்டியக் கலையை வளர்த்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
அதனை நினைவு கூறும் வகையில் திருவாரூரில் நாட்டிய கலைஞர்களை மேலும் வளர்த்தெடுக்க திருவாரூரில் செயல்பட்டு வரும் ஆன்மீக அமைப்பான ஆன்மீகம் ஆனந்தம் அறக்கட்டளையின் ஒன்பதாம் ஆண்டு துவக்கத்தையொட்டி, ஆயிரம் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி நடத்தப்பட்டது. இதில் சென்னை கோவை திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1200 நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்ட நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரம் இளைய மடாதிபதி மாசிலாமணி தேசிக சுவாமிகள் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Des : Natyanjali with 1200 dancers participating
Nanga resurrected to Bharathakalai.