Actor Karthik:We should not forget tradition பாரம்பரியத்தை மறக்ககூடாது. நடிகர் கார்த்திக் பேட்டி

Oneindia Tamil 2019-01-29

Views 468

நம் பாரம்பரியத்தை நாம் மறந்துவிட்டால் மற்றொரு பாரம்பரியம் கலாச்சாரம் நம்மீது திணிக்கப்பட்டு நாம் அதற்கு அடிமையாகிவிடுவோம் என நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்

முகப்பேரில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது ஆரோக்கிய இயற்கை மருத்துவமனை.இங்கு இயற்கை முறையில் மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்மக்களுக்கு தமிழர்களின் பாரம்பரியம் மிக்க இயற்கை முறை உணவுகளை கொண்டுசேர்க்கும் வகையில் ஆப்பிள் மில்ட் என்னும் அமைப்புடன் இணைந்து துவக்க பட்டபுதியஉணவகத்தை நடிகர் கார்த்திக் திறந்து வைத்தார்.பிரபல இயற்கை மருத்துவரும் உணவகத்தின் உரிமையாளருமான சிவராமன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில்இயக்குனர் தங்கர்பச்சான், நடிகர் டெல்லி கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்திக் நம் பாரம்பரியம் மிகவும் பழமையானது. அதனைதிட்டமிட்டு அழிக்கபட்டுவருகிறது குறிப்பாக உணவு முறைகள் அழிக்க பட்டுவிட்டது. நம் பாரம்பரியத்தை நாம் மறந்துவிட்டால் மற்றொரு பாரம்பரியம் கலாச்சாரம் நம்மீதுதிணிக்கப்பட்டு நாம் அதற்கு அடிமையாகிவிடுவோம்.எனவே நாம் நம்பாரம்பரியத்தை பாதுக்காக்க வேண்டும் என்றார். நம் நாட்டில் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அவர்களின் உற்பத்தி பொருள்களை மதிப்புக்கூட்டி அதனை விற்பனைக்கு கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.இந்த துவக்க விழாவில்பொதுமக்கள் இயற்கை ஆர்வலர்கள் என 200க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

We should not forget the tradition ... actor Karthik interviewed

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS