மதுரை விமான நிலையத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்ட எச்ஐவி இரத்தம் பற்றிய கேள்விக்கு.மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது.கவனக்குறைவாக இருந்துள்ளனர் அதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் ஒரு சிஸ்டம் இருக்க வேண்டும். இரத்தத்தை பரிசோதனை செய்து இருக்க வேண்டும். இந்த சிஸ்டத்தை ஏன் கடைபிடிக்கவில்லை என்று தெரியவில்லை.இதில் சம்மந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டால் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சொல்ல இருக்கிறீர்கள் என்பது தான் தெரியவில்லை.இனி வரும் காலங்களில் இது போன்று நடக்காமல் இருக்க வேண்டும்.அனைத்து அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் உள்ள இரத்ததை பரிசோதனை செய்ய வேண்டும்.துபோன்று நடந்த பிறகுதான் மக்களுக்கு விழிப்புணர்வு வருகிறது. என்றார் மேலும் தயாரிப்பாளர் நடிகர் சங்கம் போன்றவற்றில் எனக்கு எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது என்னை பொருத்தவரை எந்த ஒரு நடவடிக்கை இருந்தாலும் சரி எந்த ஒரு சங்கமாக இருந்தாலும் சரி நடவடிக்கை ஜனநாயக முறையில் இருக்க வேண்டும் என்று எனது கருத்தை பதிவு செய்துள்ளேன்.என்றும் நடிகர் சங்கத்தின் உறுப்பினராக கூட நான் இல்லை.என்றும் தெரிவித்தார்
DES: I am not even a member of the actor's association .. interviewed by actor Sarath Kumar