உயர் நீதிமன்ற உத்தரவின்படி குட்கா ஊழல் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், நேற்று அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, தமிழக டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா, மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.