குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள்காவல்துறை ஆணையர், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையை தொடர்ந்து கைது நடவடிக்கையிலும் சிபிஐ இறங்கி உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் குட்கா விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அமலாக்கத்துறையும், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணையை துவக்கி உள்ளது சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.