கடந்த 2006-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் அப்துல் சமத் கான் என்பவரை கூலிப்படையை சேர்ந்த மூன்று நபர்கள் கண்மூடித்தனமாக தாக்கினர் . கூலிப் படையால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த அப்துல் சமத் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சொத்து தகராறு காரணமாக உறவினர்கள் கூலிப் படையை ஏவியதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கூலிப்படையைனர் தாக்கும், நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.