குழந்தை கடத்துபவர் என நினைத்து தாக்குதல்

Oneindia Tamil 2018-07-25

Views 1.3K

மனநிலை பாதிப்படைந்த பெண்ணை குழந்தை கடத்துபவர் என நினைத்து தாக்குதல் தடுக்க சென்ற போலிஸார் மீதும் தாக்குதல் போலீஸ் ஜீப் கண்ணாடி உடைப்பு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகேயுள்ள சோளங்குருணி கிராமத்தில் மனநிலை பாதிப்படைந்த பெண்ணை தாக்குவதாக பெருங்குடி போலீஸாருக்கு தகவல் வந்தது. இதன்படி பெருங்குடி காவல் ஆய்வாளர் சுமிதி தலைமையில் போலீஸார் சென்றனர் , தாக்குதல் நடத்தியவர்களை தடுத்த காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்.மேலும் போலீஸ் ஜீப் மீதும் தாக்குதல் நடத்தியதில் ஜீப் கண்ணாடி உடைந்தது.இது குறித்து சோளங் குருணி VAO மலைச்சாமி அளித்த புகாரின் பேரில் பெருங்குடி போலீஸார் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் சோளங்குருணி கிராமத்தை சேர்ந்த பாண்டி மகன் முத்துராமன் , சின்ன ராமன் மகன் சாமிநாதன் , கண்ணன் உள்பட 21 பேரை பெருங்குடி போலீஸார் கைது செய்தனர்.மேலும் இதே ஊரை சேந்த கணேசன் மகன் மணிராஜவை தேடி வருகின்றனர்.

The police jeep glass breakthrough attacking policemen who attacked the mentally challenged woman as a kid kidnapped

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS