எதுக்குமே ஒரு ஈவு இரக்கம் வேணாமா? செய்ற தப்பை தட்டி கேட்டா அதுக்கு இன்னொரு மன்னிக்க முடியாத தப்பை செய்யறதா? மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு மாநகர பேருந்து சோழவந்தான் நோக்கி சென்று கொண்டிருந்தது.
சமயநல்லூர் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் சிலர் அந்த பஸ்ஸில் ஏற தயாராக நின்றிருந்தனர். ஆனால் பஸ் அந்த ஸ்டாப்பில் நிற்காமல், கொஞ்ச தூரம் தள்ளி போய் நின்றது. இதனால் பயணிகள் ஓடிப்போய் அதில் ஏறினர்.