கோவை நரசிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் லோகஸ்வரி என்ற மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மாடியில் இருந்து பேரிடர் காலங்களில் எப்படி தப்பித்துக்கொள்வது என்பது பற்றி செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது இரண்டாவது மாடியில் இருந்து மாணவி லோகஸ்வரியை குதிக்க சொல்லி பயிற்சியாளர் ஆறுமுகம் கீழே தள்ளியுள்ளார்.
அப்போது நிலை தடுமாறி முதல் மாடியில் இருந்த ஸ்லாப் மேலே விழுந்த லோகேஸ்வரியின் பின் தலையிலும் வலது கழுத்துப்பகுதியிலும் பலத்த அடிபட்டது. இதனையடுத்து லோகேஸ்வரியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரை அடுத்து பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV