மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினார்கள், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அனைவரையும் விசாரிக்கும் வகையில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதல்வர், அரசு டெண்டர்கள் உள்ளிட்டவற்றையும் விசாரிக்க முடியும் என கூறினார். ஊழலில் திளைத்த இயக்கம் திமுக என்றும் ஊழல் எதிர்ப்பு என்ற நிலை திமுகவிடம் இல்லை எனவும் அவர் விமர்சித்தார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV