ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் நடத்த உச்சநீதிமன்றம் எதிர்ப்பு

Oneindia Tamil 2018-02-13

Views 7.7K

ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்த உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சசிகலா, லாலு பிரசாத் யாதவ் போன்றோர் அரசியல் கட்சிகளை நடத்த முடியாத நிலை விரைவில் உருவாகும் என தெரிகிறது. அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலாவை நியமித்தனர் அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள். ஆனால் அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பின்னர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என நியமிக்கப்பட்டனர். தற்போது அதிமுக(அம்மா) அணியின் பொதுச்செயலாளராக சசிகலா, துணைப் பொதுச்செயலாளராக தினகரன் இருந்து வருகின்றனர்.

The Supreme Court questioned the logic behind having a criminal or a corrupt person heading a political party while adding that such a lapse is a blow to the purity of the election process.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS