சென்னையில் கடந்த சில வாரங்களாக செயின் பறிப்பு, வழிப்பறி, திருட்டு உட்பட குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து குற்றங்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில் சந்தேகத்திற்கிடமான 40 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சோலையம்மன் நகர், ஆட்டந்தாங்கல் ஆகிய பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், இவர்கள் பிடிப்பட்டனர். சென்னையை சேர்ந்த ரவுடிகள் புறநகரில் தங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து 40க்கும் மேற்பட்ட ரவுடிகளை பிடித்துள்ளனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV