சிவகாசியில் மது அருந்திய 15 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்த தொடர்பாக இரண்டு நபர்கள் கைது

Sathiyam TV 2018-07-17

Views 4

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த கணேசன், முகம்மது இப்ராஹிம், ஹரிஹரன், 15 வயது சிறுவன் கெளதம் உள்ளிட்ட 7 பேர் குற்றலாம் செல்வதாக கூறிவிட்டு தங்களது வீடுகளில் இருந்து சென்றுள்ளனர். இதற்கிடையே குற்றாலம் செல்லும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு சிவகாசி சிறுகுளம் கண்மாய் அருகே கூட்டாக மது அருந்திவிட்டு 4 பேர் வீட்டிற்கு சென்ற நிலையில் அனைவரும் மயக்கமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 15 வயது சிறுவன் கெளதமன், முருகன் உட்பட 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் நடத்திய விசாரணையில், மதுவில் விஷம் கலந்துள்ளது தெரியவந்துள்ளது. யார் விஷம் கலந்தது, எதற்காக விஷம் கலக்கப்பட்டது என்பது குறித்து 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்றது. இதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த முருகனின் அக்கா வள்ளியும் அதே பகுதியைச் சேர்ந்த அச்சக அதிபர் செல்வமும் நெருங்கி பழகியதாகவும், அதனை முருகன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வள்ளியும் செல்வமும் சேர்ந்து முருகனை தீர்த்துக் கட்ட கோழிக்கறியில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். அதனை வாங்கிக்கொண்டு நண்பர்களுடன் மது அருந்தும் போது சாப்பிட்டதால் முருகன் உள்ளிட்ட 4 பேரும் இறந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வள்ளியையும், செல்வத்தையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS