சென்னையில் ரவுடிகள் காவல் நிலையத்திற்குள் புகுந்து உதவி ஆய்வாளரை தாக்கிய சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கோபிநாத் என்பவர் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காவல் நிலையத்திற்குள் புகுந்த 4 ரவுடிகள் உதவி ஆய்வாளர் கோபிநாத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் கோபிநாத் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக போலி பத்திரிகையாளர் அன்பழகன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் உதவி காவல் ஆய்வாளர் கோபிநாத் மீது அவதூராக செய்தி வெளியிட்டுள்ளது போன்ற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரை காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV