பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20ம் தேதி முதல் நடைபெற உள்ள லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கிடாசலம் மற்றும் பெருந்துறை லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு சுங்க கட்டண உயர்வு சட்ட விரோமாக அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் சங்கத்தினர் வரும் 20ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து பெருந்துறை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசணை நடத்தினர். அக்கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கிடாசலம் பங்கேற்றார். அப்போது வரும் 20ம் தேதி நடைபெற உள்ள லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசுக்கு எதிராக நடத்தப்படும் இப்போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏ பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
des: Varugadasala and Perundurai Lorry Owners Association have supported the strike by the Lorry strike from the 20th of the month to insist on various demands.