அஸ்ஸாமில் 24 மணி நேரத்தில் இருவேறு இடங்களில் ஓடும் ரயிலில் கழிவறையில் 2 பெண்கள் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ராஜஸ்தானுக்கு இயக்கப்படும் ரயில், அவத் அஸ்ஸாம் எக்ஸ்பிரஸ். இந்த ரயிலில் நேற்று புதன்கிழமை மதியம் ஜோர்ஹாத் மாவட்டம் மரியானி ரயில் நிலையத்தில் சென்றபோது, ரயிலின் கழிவறையில், அஸ்ஸாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தைச் சேர்ந்த லாலிமா தேவி(48) என்ற பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.