10 nations from europe enters the knock out of fifa world cup.
21-வது ஃபிபா உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது. அதில் விளையாடும் 16 நாடுகளில் 10 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. ஆசியாவில் இருந்து ஜப்பான் முன்னேறியுள்ளது, 21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் பங்கேற்ற 32 அணிகள், தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. முதல் சுற்று லீக் ஆட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நாளை துவங்கி, ஜூலை 3 வரை நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.