ஃபிபா உலகக் கோப்பையில் இன்று இரவு 11.30 மணிக்கு நடக்கும் டி பிரிவு ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்துடன் குரேஷியாவை சந்திக்கிறது அறிமுக அணியான ஐஸ்லாந்து. இந்த ஆட்டத்தின் முடிவுக்காக அர்ஜென்டினா ரசிகர்கள் திக் திக் என்ற காத்திருக்கின்றனர்.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.
fifa world cup 2018, argentina vs nigeria