விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் கைது | அரிசி உற்பத்தி பற்றி முதல்வர்- வீடியோ

Oneindia Tamil 2018-06-23

Views 2

முல்லைத் தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள், சீருடைகள், கொடிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு வீதியில் பேராறு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாகனம் ஒன்றை போலீசார் மறித்தனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


தமிழகத்தின் அரிசி உற்பத்தி குறித்து முரண்பாடான தகவல்களை வழங்கியதாக ஆங்கில நாளேட்டின் செய்தியை மேற்கோள்காட்டி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பயிர் சாகுபடி குறித்த மாநில அரசின் கணக்கீடு, மத்திய அரசின் கணக்கீடு ஆகியவற்றில் 2013-14 ஆம் ஆண்டு முதல் மாறுபாடு இருந்து வருகிறது. 2015-16ஆம் ஆண்டில் மாநில அரசின் கணக்கீட்டை விட அரிசி உற்பத்தியானது 6 லட்சம் மெட்ரிக் டன் உயர்ந்திருப்பதாக மத்திய அரசின் கணக்கீடு தெரிவிக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Two youths arrested with Bombs belonging to the LTTE in Mullaitheevu.

TamilNadu Chief Minister Edappadi Palanisamy today clarified on the State's Rice production details.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS