பெட்ரோல், டீசல், மின்சாரம் ஆகியவற்றை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வந்து பஞ்சாலைகளுக்கு வரி வருமானம் அளிக்க வேண்டும் என பஞ்சாலை சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சீமா மற்றும் பருத்தி ஜவுளி ஏற்றுமதி கூட்டமைப்பான டெக்ஸ்புரோசில் ஆகிய சங்கங்களின் ஆலோசனை கூட்டம் கோவை சீமா அரங்கில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் டெக்ஸ்புரோசில் அமைப்பின் தலைவர் உஜ்வால் லகோதி பேசினார்.