18 எம்எல்ஏக்களின் வழக்கின் தீர்ப்பு அணு குண்டாகவும் வெடிக்கலாம் அல்லது புஸ்வாணமாகவும் மாறலாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார். தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின்18 பேரின் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு அளிக்க உள்ளது.