உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பெயிலில் வெளியாகி இருக்கும் டாக்டர் கபீல் கானின் சகோதரர் தற்போது மர்ம நபர்களால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் இருக்கும் பிஆர்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சென்ற ஆண்டு மிக மோசமான சம்பவம் ஒன்று நடந்தது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 70 குழந்தைகள் மரணமடைந்தனர்.