திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கி கொள்ளையில் வங்கியின் அலுவலக ஊழியர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 32 கிலோ நகைகளையும் போலீசார் மீட்டுள்ளனர். திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் தல் மாடியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த சனி, மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று காலை வங்கிக்கு வந்த ஊழியர்கள், நுழைவு பகுதியில் உள்ள கேட் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, லாக்கர் அறையின் கதவு மற்றும் லாக்கர்களும் திறந்திருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
Police have arrested three persons in connection with the bank robbery of the Bank of India Bank in Tiruvallur. 32 kg gold jewelery was also recovered from them.