பொதுமக்கள் சேர்ந்து போலீஸ்காரர் ஒருவரை அடித்து நொறுக்கிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து மக்களை வெளியே இழுத்து வந்து அடித்துள்ளனர்.
போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்த யார் உத்தரவிட்டது என்பது குறித்து அரசு பதில் அளிக்க வேண்டும். அமைதி போராட்டம் எப்படி கலவரமானது? அரசு பதில் அளிக்க வேண்டும். தமிழக மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று காயத்ரி ட்வீட்டியுள்ளார்.