Some unforgatable moment of AB de Villiers
கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள பல ஜாம்பவான்களில் தென்னாப்பிரிக்காவின் ஆப்ரகாம் பெஞ்சமின் டி வில்லியர்சும் ஒருவர். 360 டிகிரி பிளேயர் என்று அவரைக் கூறுவார்கள்.
அதாவது நிற்கும் இடத்தில் இருந்து அனைத்து திசைகளிலும் பந்தை அடிக்கக் கூடிய திறன் பெற்றவர். சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அவர் இன்று அறிவித்துள்ளார். இருந்தாலும் அவர் கிரிக்கெட்டில் செய்த சாதனைகள் எப்போதும் பேசப்படும்.