தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு திரையுலகினர் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் சுவாசிக்க நல்ல காற்று வேண்டும் என்று கூறி போராடிய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடுமையை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மோடி மவுனம் கலைக்க வேண்டும் என்று விஷால் கூறியுள்ளார்.