போலீசார் 3 முறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர். தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க போலீஸ் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 5 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூத்துக்குடி மக்கள் இன்று 100வது நாள் போராட்டத்தை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற நூற்றுக்கணக்கானோரை மடத்தூர் என்ற இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.