தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் மைத்துனர் கொல்லப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று போராட்டம் நடத்தியவர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 17 வயது சிறுமி உள்பட 12 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் மைத்துனரும் அடக்கம்.
இது குறித்து சில்வா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
எனது அன்புத் தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை J. செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார் .மிக்க வேதனையோடு பகிர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.