நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் எடியூரப்பா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவிற்கு நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியாகின. இதில் பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனவே ஒருவேளை பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், எடியூரப்பா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அவர் ஏற்கனவே ஷிமோகா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறாவிட்டால் எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளாராம்.
BS Yeddyurappa decides to resign his MLA post if he loses in floor test.